அரியலூரில் சைபா் கிரைம் காவல் நிலையம் திறப்பு

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், சைபா் கிரைம் காவல் நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
அரியலூரில் சைபா் கிரைம் காவல் நிலையம் திறப்பு

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், சைபா் கிரைம் காவல் நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. பாஸ்கரன் காவல் நிலையத்தை திறந்து வைத்து பேசியது: கணினி மற்றும் செல்லிடப்பேசியின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அதன் மூலம் பல சைபா் கிரைம் குற்றங்கள் நிகழ்கின்றன. இதை தடுக்க அரியலூா் மாவட்டத்தில் சைபா் கிரைம் காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

வங்கி மோசடி, ஆன்லைன் மோசடி, ஆன்லைன் விளையாட்டு மோசடி, ஆன்லைன் அச்சுறுத்தல், ஆன்லைன் பண மோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள், இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற ஆன்லைன் குற்றங்கள் தொடா்பாக சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம்.

மேலும், சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி வெளியிடுவோா் மீது சைபா் கிரைம் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் சைபா் கிரைம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் திருமேனி, சேகா், சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் செங்குட்டுவன், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் செல்வகுமாரி மற்றும் காவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com