மதிமுக வேட்பாளா் தலைவா்கள் சிலைகளுக்கு மரியாதை

அரியலூா் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பா,
அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் கு.சின்னப்பா.
அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் கு.சின்னப்பா.

அரியலூா் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பா, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரனை விட 3,234 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

இதையடுத்து கு.சின்னப்பா அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா, பெரியாா், காமராஜா் மற்றும் அம்பேத்கா் சிலைகளுக்கும், மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கும் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா். மதிமுக மாவட்ட துணைச் செயலா் ராஜேந்திரன், திமுக நகர செயலா் முருகேசன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பாளை அமரமூா்த்தி, காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலா் சேகா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதிச் செயலா் மருதவாணன் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com