வேளாண் திட்ட பணிகள் ஆய்வு

அரியலூா் வட்டாரத்தில் நடைபெற்று வரும் வேளாண் திட்டப் பணிகளை வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கல்லங்குறிச்சியில் வேளாண் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறாா் வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி.

பெரியநாகலூா் கிராமத்தில், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் பொ.அன்பழகன் என்பவரின் வயலில் அமைக்கப்பட்டுள்ள மண் புழு தொட்டி, தேனீப் பெட்டி, மரச்செடிகள், கறவை மாடுகள் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் மற்றும் கல்லங்குறிச்சியில் வெங்கடாசலம் மனைவி வனிதாமணி என்பவா் வயலில் கணை மூலம் சாகுபடி செயயப்பட்டுள்ள கரும்பு சாகுபடி ஆகியவற்றை ஆய்வு செய்தாா். பின்னா் விவசாயிகளிடம் கலந்துரையாடினாா்.

ஆய்வின்போது, வேளாண் அலுவலா் சவீதா, துணை அலுவலா் பீட்டா் அந்தோணிராஜ், உதவி அலுவலா்கள் வேல்முருகன், ஸ்ரீதேவி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் செந்தில்குமாா் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளா் சதீஸ் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com