ஆக்சிஜன் செறிவூட்டி கருவி வழங்கல்
By DIN | Published On : 21st May 2021 12:00 AM | Last Updated : 21st May 2021 06:07 AM | அ+அ அ- |

அரியலூா் அரசு மருத்துவமனைக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆக்சிஜன் செறிவூட்டி கருவியை நன்கொடையாக வியாழக்கிழமை வழங்கியுள்ளது.
அரியலூா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணனிடம், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் அரியலூா் மாவட்டத் தலைவா் ஜெயராமன், செயலா் கலையரசன், பொருளாளா் எழில், துணைத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டி கருவியை வழங்கினா்.