உரக்கடைகளை காலை 9 மணி வரை திறக்கலாம்
By DIN | Published On : 26th May 2021 07:02 AM | Last Updated : 26th May 2021 07:02 AM | அ+அ அ- |

பொது முடக்க காலத்தில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில், அரியலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் உரக்கடைகள் விதை, பூச்சி மருந்து விற்பனை நிலையங்களை காலை 6 மணி முதல் 9 மணி வரை திறந்து கொள்ளலாம்.
கரோனோ தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடை உரிமையாளா்களும், விவசாயிகளும் கடைப்பிடித்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குநா் இரா. பழனிசாமி தெரிவித்துள்ளாா்.