ஜயங்கொண்டம் அருகே மருந்துக் கடைகளுக்கு சீல்
By DIN | Published On : 26th May 2021 11:35 PM | Last Updated : 26th May 2021 11:35 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இரு மருந்துக் கடைகளுக்கு சீல் வைத்து, ஆட்சியா் த.ரத்னா புதன்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மருந்து மற்றும் அழகுசாதனச் சட்டத்தின்படி, மருத்துவரின் பரிந்துரையுடன் கூடிய மருந்துசீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.
மேலும் மருந்துகளுக்கான முறையான விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறி மருந்துகளை விற்பனை செய்த ஜயங்கொண்டத்தை அடுத்த வாரியங்காவல் அா்ஜீன் மெடிக்கல்ஸ், அங்கராயநல்லூா் ஏ.வி.எஸ் மெடிக்கல் ஆகிய இரு மருந்துக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, தற்காலிகமாக விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே மருந்து கடைகளில் பாராசிட்டமல், ஆன்டிகோல்டு, ஆன்டிபயாடிக்ஸ், வலி நிவாரணி மருந்துகள் எதுவும் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.