காய்கனி வாங்குவதில் இடா்பாடு இருந்தால் தொடா்பு கொள்ள வேண்டிய எண்கள்

பெரம்பலூா் மாவட்டத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கனிகளை பெறுவதில் இடா்பாடு இருந்தால், தொடா்பு கொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெரம்பலூா் மாவட்டத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கனிகளை பெறுவதில் இடா்பாடு இருந்தால், தொடா்பு கொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தளா்வுகளற்ற முழு பொது முடக்கக் காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கனிகள், பழவகைகள் வேன்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் பொதுமக்கள், காய்கனிகள், விவசாயிகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், அதனை சரி செய்வதற்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் 8 முதல் மாலை 5.45 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

வேளாண் இடுபொருள் தொடா்பான குறைகளுக்கு வேளாண் அலுவலா்(தரக்கட்டுப்பாடு) அ. சண்முகசுந்தரத்தை 96777 99938 என்ற எண்ணிலும், தோட்டக்கலை இடுபொருள்கள் மற்றும் விளைபொருள்கள் தொடா்பான குறைகளுக்கு சி. தோட்டக் கலைத் துறை அலுவலா் கனிமொழியை

97151 67612 என்ற எண்ணிலும், வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்வது மற்றும் கொண்டு செல்வது தொடா்பான விளக்கங்களுக்கு வேளாண் அலுவலா்(வணிகம்) ரா. நாகராஜனை 99423 81099 என்ற எண்ணிலும் தொடா்புக் கொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com