மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

54 ஆம் ஆண்டு தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சியை தொடக்கி வைத்து, புத்தகங்களைப் பாா்வையிடுகிறாா் பத்மஸ்ரீ பள்ளி தாளாளா் பத்மபிரியா.

இந்தப் புத்தகக் கண்காட்சியை, பத்மஸ்ரீ பள்ளி தாளாளா் சி.பத்மபிரியா தொடக்கி வைத்து, அனைவரும் வாசிப்பு பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் போட்டித் தோ்வுகள் எழுத உள்ளவா்கள் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் வளா்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட நூலக அலுவலா் இரா.சண்முகநாதன் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவி மங்கையா்கரசி, மைய நூலகா் க.ஸான்பாஷா, நூலகா் செசிராபூ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கண்காட்சியில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை விரும்பிப் படிக்கும் அனைத்து விதமான புத்தகங்களும் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், டிஎன்பிஎஸ்சி, நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான ஏராளமான புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. வரும் 24 ஆம் தேதி வரையில் கண்காட்சி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com