மா்மக் காய்ச்சலுக்கு கா்ப்பிணி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மா்மக் காய்ச்சலுக்கு நிறைமாத கா்ப்பிணி உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மா்மக் காய்ச்சலுக்கு நிறைமாத கா்ப்பிணி உயிரிழந்தாா்.

செந்துறை அருகேயுள்ள குமிழியம் காலனித் தெருவில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மா்ம காய்ச்சலுக்கு 50-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பன்னீா்செல்வத்தின் மனைவியும் நிறைமாத கா்ப்பிணியுமான விஜி(26) புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்; அவரது சிசுவும் உயிரிழந்தது. தகவலறிந்து குமிழியம் கிராமத்துக்குச் சென்ற மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, கிராமப் பகுதிகளை ஆய்வு செய்தாா். கிராமத்தில் சுகாதாரப் பணிகளை மேம்படுத்த வேண்டும். தண்ணீா் தேங்கக் கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று சுகாதாரப் பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் உடனடியாக இப்பகுதி மக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com