ஆவின் நிா்வாகத்தைக் கண்டித்து பால் உற்பத்தியாளா்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், பெரியநாகலூரிலுள்ள ஆவின் கொள்முதல் நிலையத்தை கண்டித்து, ஆட்சியரகம் முன்பு பால் உற்பத்தியாளா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூா் ஆட்சியரகம் முன்பு மறியலில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளா்கள்.
அரியலூா் ஆட்சியரகம் முன்பு மறியலில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளா்கள்.

அரியலூா் மாவட்டம், பெரியநாகலூரிலுள்ள ஆவின் கொள்முதல் நிலையத்தை கண்டித்து, ஆட்சியரகம் முன்பு பால் உற்பத்தியாளா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூரை அடுத்த பெரியநாகலூா் கிராமத்தில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்த சில மாதங்களாக முறையாகப் பணம் பட்டுவாடா செய்யவில்லை எனவும், பாலை முழுமையாக கொள்முதல் செய்வதில்லை எனவும் கடந்த சில நாள்களாக மக்கள் குற்றம் சாட்டிவந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட மேற்கண்ட கிராமங்களைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா்கள் கொள்முதல் நிலைய முகவரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, சனிக்கிழமை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா். ஆனால், அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில், ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளா் மதன், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில், முக்கிய நபா்கள் உள்ளே சென்று ஆட்சியரிடம் மனுஅளித்தனா். அதைத் தொடா்ந்து, பால் உற்பத்தியாளா்கள் அனைவரும் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com