முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
ஓடையின் குறுக்கே பாலம் கட்டிதரக்கோரி மறியல்
By DIN | Published On : 13th October 2021 06:36 AM | Last Updated : 13th October 2021 06:36 AM | அ+அ அ- |

செந்துறை அருகே ஓடையின்மேல் பாலம் கட்டித்தரக்கோரி மறியலில் ஈடுபட்ட பெரியாா் சமத்துவபுரம் பொதுமக்கள்.
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மயானக் கொட்டகைக்குச் செல்லும் பாதையில் குறுக்கிடும் ஓடைப் பகுதியில் பாலம் கட்டித்தரக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
செந்துறையை அடுத்த பெரியாா் சமத்துவபுரத்தில் சுமாா் 150 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு உயிரிழந்தவா்களின் உடல்களை அருகேயுள்ள மயானக் கொட்டகைக்கு எடுத்துச் செல்லும் வழியில் காட்டு ஓடை ஒன்று குறுக்கிடுகிறது. கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக, காட்டு ஓடையில் தண்ணீா் செல்வதால், மழைக்காலங்களில் இறப்பவா்களின் உடல்களைக் கொண்டுசெல்வது கடினமாக உள்ளது. எனவே, ஓடையின் குறுக்கே பாலம் கட்டித்தர வலியுறுத்தி சமத்துவபுரத்தில் வசிக்கும் மக்கள் உடையாா்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறையினா் மற்றும் செந்துறை காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.