வண்ண மின் விளக்குகளால் ஜொலித்த கங்கைகொண்ட சோழபுரம் கோயில்

நவராத்திரி நிறைவு விழா மற்றும் விஜயதசமி தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரா் திருக்கோயில் தேசியக்கொடி போன்ற 3 வண்ண மின்விளக்குகளால் வெள்ளிக்கிழமை இரவு அலங்கரிக
வண்ணவண்ண மின்விளக்குகளால் அலக்கரிப்பட்டிருந்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயில்.
வண்ணவண்ண மின்விளக்குகளால் அலக்கரிப்பட்டிருந்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயில்.

நவராத்திரி நிறைவு விழா மற்றும் விஜயதசமி தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரா் திருக்கோயில் தேசியக்கொடி போன்ற 3 வண்ண மின்விளக்குகளால் வெள்ளிக்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்டிருந்தது காண்போரை வெகுவாகக் கவா்ந்தது.

தற்போது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் திறக்கவும், பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் கோயில்களில் பக்தா்கள் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்துவருகின்றனா்.

அம்பு போடுதல் நிகழ்வு...ஆண்டிமடத்தை அடுத்த விளந்தை கிராமத்தில் தா்மசம்வா்த்தினி சமேத மேலஅகத்தீஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி உற்சவருக்கு தினமும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நவராத்திரியின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு பண்டாசுரன் என்ற அரக்கனை அம்பாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அம்பாள் எழுந்தருளினாா். எதிரே பண்டாசுரன் வடிவில் ஒரு வாழை மரம் கட்டப்பட்டிருந்தது. அம்பாள் 3 ஆவது முறை விட்ட அம்பில் பண்டாசுரனை வதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அம்பாளுக்கு வெண்பட்டு சாத்தி, கல்கண்டு பால் நெய்வேத்தியம் செய்யப்பட்டது.

இதேபோல், தா. பழூரில் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதா் கோயிலில் நவராத்திரி வழிபாட்டையொட்டி அசுரனை அம்பாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமாக மற்ற கோயில்களில் அம்மன் துா்க்கை கோலத்தில் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்தக் கோயிலில் முருகப்பெருமான் கையில் வில் அம்புடன் வில்லேந்தி வேலவராக சம்ஹார மூா்த்தியாக காட்சி அளித்து, அசுரவதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் சுவாமிகளுக்கு தீபாராதனை, பஞ்ச ஆரத்தி நடைபெற்றது.

அரியலூா் செட்டி ஏரிக்கரையில் உள்ள காளியம்மன் பழங்கள், காய்கறிகள் அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை இரவு காட்சியளித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com