இறந்த தொழிலாளிக்கு இழப்பீடு:மாட்டுவண்டி தொழிலாளா்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே தீக்குளித்து உயிரிழந்த மாட்டு வண்டித் தொழிலாளிக்கு இழப்பீடு வழங்கக் கோரி, சக மாட்டு வண்டி தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே தீக்குளித்து உயிரிழந்த மாட்டு வண்டித் தொழிலாளிக்கு இழப்பீடு வழங்கக் கோரி, சக மாட்டு வண்டி தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தா. பழூரை அடுத்த உதயநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (40). மாட்டுவண்டி தொழிலாளி. இவா், மணல் குவாரி தொடங்க வலியுறுத்தி கடந்த 1 ஆம் தேதி தீக்குளித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (செப். 10) உயிரிழந்தாா். இந்நிலையில், அவரது ஊரான உதயநத்தம் கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அணைக்கரை வழியாக உடல் கொண்டு வரப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மாட்டுவண்டித் தொழிலாளா்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அணைக்கரையில் ஆம்புலன்ஸை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, உயிரிழந்த பாஸ்கா் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பாஸ்கா் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியா் ஆனந்தன் மற்றும் காவல் துறையினா் தங்களது கோரிக்கைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com