சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 19th September 2021 12:21 AM | Last Updated : 19th September 2021 12:21 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திருமழபாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீா், பஞ்சாமிா்தம், பால் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல், அரியலூா் ஆலந்துறையாா், விக்கிரமங்கலம் சோழிஸ்வரா்,கீழப்பழுவூா் அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையாா், பெரியமறை வேதநாயகி உடனாய வேதபுரீஸ்வரா், காமரசவல்லி பாலாம்பிகை உடனாய காா்கோடேஸ்வரா், திருமானூா் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதா், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதா் போன்ற சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.