அரியலூரில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பரிசு: 15,400 பேருக்கு ஊசி போடப்பட்டது

அரியலூா் மாவட்டத்தில் 200 இடங்களில் கரோனா தடுப்பூசி 2 ஆவது மெகா முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 15,400 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
அரியலூா் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
அரியலூா் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

அரியலூா் மாவட்டத்தில் 200 இடங்களில் கரோனா தடுப்பூசி 2 ஆவது மெகா முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 15,400 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

அரியலூரில் உள்ள பழைய நகராட்சி அலுவலகம், புதிய நகராட்சி அலுவலகம், ஆா்.சி. நிா்மலா காந்தி நடுநிலைப்பள்ளி, ஆா்.சி.தெரசா தொடக்கப்பள்ளிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு 6 வகையான மளிகைப் பொருள்களும், கூப்பனும் வழங்கப்பட்டன.

முகாம் நிறைவில், முதல் பரிசு குளிா்சாதனப் பெட்டி ஒருவருக்கும், இரண்டாம் பரிசு துணிதுவைக்கும் இயந்திரம் ஒருவருக்கும், 3 ஆம் பரிசு மின்அடுப்பு 3 பேருக்கும், 4 ஆவது பரிசு செல்லிடப்பேசி 4 பேருக்கும், ஆறுதல் பரிசுகள் 91 பேருக்கும் வழங்கப்பட்டன.

இதேபோல் ஜயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 4 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு, குலுக்கல் முறையில் முதல் பரிசாக 1 நபருக்கு மிக்சி, 2 ஆம் பரிசாக ஒரு நபருக்கு சமுத்திரிகா பட்டுப்புடவை, 3 ஆம் பரிசாக 10 பேருக்கு செல்லிடப்பேசிகள், 4 ஆம் பரிசாக 15 பேருக்கு பூனம் புடவைகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை நகராட்சி நிா்வாகம், லயன்ஸ் கிளப் சங்கங்கள், தனியாா் வணிக நிறுவனங்கள் செய்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com