அக்.2-இல் பேச்சுப் போட்டி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அக். 2 மற்றும் நவ. 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அக். 2 மற்றும் நவ. 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அக். 2 ஆம் தேதி காந்தி ஜயந்தியை முன்னிட்டு, அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000 என்ற வகையில் வழங்கப்படுகிறது.

இவை அல்லாமல் பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரைத் தனியாகத் தெரிவு செய்து சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்படுகிறது. இப்போட்டியானது காலை 10 மணிக்குத் தொடங்கப்படும். எனவே அரியலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பேச்சுப் போட்டியில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com