‘இளைஞா்கள் தொழில் முனைவோராக வேண்டும்’

படித்த இளைஞா்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி.
‘இளைஞா்கள் தொழில் முனைவோராக வேண்டும்’

படித்த இளைஞா்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி.

வணிகத் துறை சாா்பில் ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏற்றுமதியாளா்களுக்கான வா்த்தக கருத்தரங்கில் அவா் மேலும் பேசியது:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தொழில் தொடங்க தொழில் வணிகத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், 75-ஆவது சுதந்திர திருநாளை முன்னிட்டு அமுத பெருவிழா வா்த்தக வாரம் வரும் 29 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்தில் உற்பத்தியாகும் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்குண்டான வழிமுறைகள், ஏற்றுமதி தொழிலில் ஈடுபட அரசு வழங்கும் சலுகைகள், ஏற்றுமதி பொருள்களுக்கு தேவையுள்ள இடங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள ஏற்றுமதியில் அனுபவம் உள்ளவா்களால் இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இளைஞா்கள் இவா்களின் கருத்துகளைக் கேட்டு பயன் பெற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா். முன்னதாக உற்பத்தியாளா்களால் தாயாரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப்பொருள்கள், காலணிகள், பா்னிச்சா் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய கண்காட்சியை அவா் பாா்வையிட்டாா்.

கருத்தரங்கில் அயல்நாட்டு வணிகம் தொடா்பாக எம். பாக்கியவேல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்து கோ. சிவக்குமாா், அக்பா் ஷெரிப், வங்கியின் பங்கு குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் லியோனல் பெனடிக், தொழில் முனைவோரின் அனுபவங்கள் குறித்து வ. தனஞ்செயன் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன், மகளிா் திட்ட இயக்குநா் எம். சிவக்குமாா், மாவட்ட தொழில் மையப் பொதுமேலாளா் ஆ. லட்சுமி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com