அரியலூரில் மறியலில் ஈடுபட்ட 164 போ் கைது

அரியலூா் அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 91 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரியலூரில் மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா்.
அரியலூரில் மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா்.

அரியலூா்: அரியலூா் அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 91 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

போராட்டத்துக்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் மகேந்திரன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் தண்டபாணி ஆகியோா் தலைமை வகித்தனா். திருமானூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 31 பேரும், ஜயங்கொண்டத்தில் 31 பேரும், ஆண்டிமடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 11 பேரும் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

அரியலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக நகர செயலா் முருகேசன், திருமானூா் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக ஒன்றியச் செயலா்(கி) கென்னடி, கீழப்பழுவூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா்(மே) அசோக்சக்ரவா்த்தி, ஜயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய அணி ஒன்றியச் செயலா் தனசேகா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com