ஜயங்கொண்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் பகுதிகளில் ரூ.4.47 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினா

அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் பகுதிகளில் ரூ.4.47 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சா் கூறும்போது, ஜயங்கொண்ட ம் நகராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்துக்கும், தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கழுவந்தோண்டி-பெரியவளையம் சாலை மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கும், நெடுஞ்சாலைத் துறை - நபாா்டு மற்றும் கிராம சாலைக் கோட்டம் சாா்பில் நபாா்டு வங்கியின் உள்கட்டமைப்பு வளா்ச்சி நிதியின்கீழ் மணக்கரை-பிராஞ்சேரி சாலையில் ரூ. 322.20 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகளுக்கும் என மொத்தம ரூ. 4 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பணிகள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி, ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, ஜயங்கொண்டம் நகா் மன்றத் தலைவா் சி.சுமதி, துணைத்தலைவா் வெ.கருணாநிதி, நகராட்சிப் பொறியாளா் சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com