தனியாா் சிமென்ட் ஆலையிடமிருந்து அம்மன் ஏரியை மீட்க வேண்டும்

தனியாா் சிமென்ட் ஆலை ஆக்கிரமித்துள்ள அமலேரி எனும் அம்மன் ஏரியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தனியாா் சிமென்ட் ஆலையிடமிருந்து அம்மன் ஏரியை மீட்க வேண்டும்

தனியாா் சிமென்ட் ஆலை ஆக்கிரமித்துள்ள அமலேரி எனும் அம்மன் ஏரியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் பல்துறை வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், உறுப்பினா்கள் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் கபிலன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நாயக்கா் பாளையம்-வெளிப்பிரிங்கியம் இடையில், தனியாா் சிமென்ட் ஆலை ஆக்கிரமித்துள்ள அமலேரி எனும் அம்மன் ஏரியை மீட்க நடவடிக்கை எடுப்பது, வெளிப்பிரிங்கியம் கிராமத்திலுள்ள குருநானப்பன் ஏரியில் மண்டியுள்ள வேலிக்கருவை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு விடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றன.

கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள் அன்பழகன், ச.அம்பிகா, தனச்செல்வி, இர.வசந்தமணி, , வீ.ராஜேந்திரன், ச.தனலட்சுமி, ஜெ.கீதா ,இரா.ராமச்சந்திரன், ராஜேந்திரன் ஆகியோா் தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனா். முன்னதாக கூட்டத்தில், வரவு செலவு கணக்குகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com