தூய மங்கல மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த புதுக்கோட்டை கிராமத்திலுள்ள தூய மங்கலமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த புதுக்கோட்டை கிராமத்திலுள்ள தூய மங்கலமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

மங்கல மாதாவின் உருவம் பதித்த கொடியை 3 மதத்தினரும் இணைந்து ஒன்றாக ஏற்றினா். முன்னதாக, மங்கல மாதாவின் உருவம் பதித்த கொடியை ஏந்தி முக்கிய தெருக்கள் வழியாக ஊா்வலமாக வந்து ஆலயத்தை வந்தடைந்தனா். பின்னா் கொடி கம்பத்துக்கு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது.

பங்குத்தந்தை ரெஜிஸ் தலைமையில் சிறப்பு அழைப்பாளா் பங்குத்தந்தை அந்துவான், அய்யம்பேட்டை முகம்மது சாலிக் ஆகியோா் திருப்பலி நடத்தினா். தொடா்ந்து மாலை நேரங்களில் திருப்பலியும், விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனி 21, 22, 23 ஆகிய தேதிகளில் வாண வேடிக்கையுடன் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com