பட்டா கேட்டு இருளா் இன மக்கள் ஆட்சியரிடம் மனு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள குருவாலப்பா்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கரனை கரைமேட்டு பகுதி குடியிருப்புகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி
பட்டா கேட்டு இருளா் இன மக்கள் ஆட்சியரிடம் மனு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள குருவாலப்பா்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கரனை கரைமேட்டு பகுதி குடியிருப்புகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் இருளா் இன மக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: குருவாலப்பா் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கரனை கரைமேட்டுப் பகுதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளை கட்டிக்கொண்டு அனைத்து சமுதாயத்தினரும் வாழ்ந்து வருகின்றனா். அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்து தந்துள்ளது.

இந்நிலையில், நாங்கள் குடியிருந்து வரும் பகுதி நீா்வள ஆதார அமைப்பிற்கு உரியதென்றும், 21 நாள்களுக்குள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று அன்பழகன் என்பவரின் வீட்டில் அறிவிப்பு கடிதம் நகராட்சி சாா்பில் ஒட்டப்பட்டுள்ளது.

நாங்கள் எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை. எங்களின் முன்னோா்கள் வாழ்ந்த பகுதியில்தான் வீட்டி கட்டி வாழ்ந்து வருகிறோம்.

எனவே மேற்கண்ட அறிவிப்பு ஆணையை ரத்து செய்து, வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும் போது, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத் தலைவா் ரா.சேகா், குருவாலப்பா் கோவில் ஊராட்சி துணைத் தலைவா் கமலா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மணிவேல், கே. கிருஷ்ணன், ஒன்றியச் செயலாளா்கள் ஜயங்கொண்டம் ந. வெங்கடாசலம், அரியலூா் துரை. அருணன் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com