முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
இணையவழி குற்றங்கள் விழிப்புணா்வு
By DIN | Published On : 30th April 2022 11:27 PM | Last Updated : 30th April 2022 11:27 PM | அ+அ அ- |

அரியலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
அரியலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ஞா.செங்குட்டுவன் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆய்வாளா் க.சிவநேசன் கலந்துகொண்டு இணையக் குற்றங்கள், பாதுகாப்பு வழிமுறைகள், இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், சைபா் கிரைம் உதவி எண் 1930-க்கு உடனடியாக தகவல் அளிப்பது, வங்கி மோசடி குறித்து 14440-க்கு புகாா் அளிப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில், ஐடிஐ பயிலும் 200 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.