முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th April 2022 11:28 PM | Last Updated : 30th April 2022 11:28 PM | அ+அ அ- |

அரியலூா் அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வைக் கண்டித்தும், சுங்கச்சாவடியில் உயா்த்தப்பட்ட கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் கப்பல்குமாா் தலைமை வகித்தாா். சிதம்பரம் மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் நீலமகாலிங்கம், தொகுதிப் பொறுப்பாளா்கள் அரியலூா் ராபா்ட், ஜயங்கொண்டம் பிரபாகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு விலைவாசி உயா்வைக் கண்டித்து முழக்கமிட்டனா்.