எருத்துக்காரன்பட்டியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

அரியலூரை அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள் வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டன.
எருத்துக்கரான்பட்டி, திட்டக் குடி சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கும் பணி.
எருத்துக்கரான்பட்டி, திட்டக் குடி சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கும் பணி.

அரியலூரை அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள் வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டன.

எருத்துகாரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திட்டக்குடி சாலையை ஆக்கிரமித்து 5 குடும்பத்தினா் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனா். உயா்நீதிமன்ற உத்தரவின்படி, நீா் நிலையங்கள் மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்றி வருகிறது. அதன்படி, அரியலூா் எருத்துக்காரன் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திட்டக்குடி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யுமாறும், சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளா்களுக்கு வருவாய்த் துறையினா் தெரிவித்தும் யாரும் காலி செய்யவில்லை

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் ராஜமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் அகிலா ஆகியோரின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் முன்னிலையில் மேற்கண்ட சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

வீடுகள் இடிப்பதற்கு சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். சிலா் தாங்களாகவே முன்வந்து வீட்டில் இருந்த பொருள்களை அப்புறப்படுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com