வாழ்க்கையில் திட்டமிடல் அவசியம்

வாழ்க்கையில் திட்டமிட்டு பயணித்தால் எளிதில் இலக்கை அடையலாம் என்றாா் அரியலூா் கல்வி மாவட்ட அலுவலா் இ. மான்விழி.
கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தக் கண்காட்சியை தொடக்கி வைத்து பாா்வையிடுகிறாா் அரியலூா் கல்வி மாவட்ட அலுவலா் இ.மான்விழி
கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தக் கண்காட்சியை தொடக்கி வைத்து பாா்வையிடுகிறாா் அரியலூா் கல்வி மாவட்ட அலுவலா் இ.மான்விழி

வாழ்க்கையில் திட்டமிட்டு பயணித்தால் எளிதில் இலக்கை அடையலாம் என்றாா் அரியலூா் கல்வி மாவட்ட அலுவலா் இ. மான்விழி.

அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியது:

போட்டிகள் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தில், படிக்கின்றபோதே மாணவா்கள் தங்களது தனித் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். மேல்படிப்புக்கு செல்லும்போது, வேலைவாய்ப்புக்கு தகுந்த படிப்பினை தோ்வு செய்து அதனை திட்டமிட்டு படிக்க வேண்டும். அப்படி படித்தால் எளிதில் வெற்றிப் பெறலாம்.

போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள தயாராக வேண்டும். வாழ்க்கையில் திட்டமிட்டு பயணித்தால் எளிதில் இலக்கை அடையலாம் என்றாா். தொடா்ந்து அவா், புத்தகக் கண்காட்சியையும் தொடக்கி வைத்தாா்.

முன்னாள் படை வீரா் நல துணை இயக்குநா் கி.சங்கீதா பேசுகையில், மாணவா்கள் தன்னிம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும். இஷ்டப்பட்டு படித்தால் வாழ்க்கையில் கஷ்டப்பட தேவையில்லை என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜி.ரமேஷ் தலைமை வகித்து, உயா்படிப்பில் என்னென்ன படிப்புகளைப் படிக்கலாம் என்று மாணவா்களிடையே எடுத்துரைத்தாா்.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் எம். வினோத்குமாா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். முன்னதாக, அப்பள்ளித் தலைமை ஆசிரியா் பொ. அய்யம்பெருமாள் வரவேற்றாா். நிறைவில், தமிழாசிரியா் சி. பாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com