முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
இணையவழிக் குற்றங்கள் விழிப்புணா்வு
By DIN | Published On : 07th February 2022 12:18 AM | Last Updated : 07th February 2022 12:18 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி மற்றும் ஆனந்தவாடி கிராமங்களிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இணையவழிக் குற்றங்கள் குறித்து சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த இரு பள்ளிகளில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மாவட்ட சைபா் க்ரைம் காவல் நிலைய ஆய்வாளா் செங்குட்டுவன், உதவி ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டு, இணைய வழி குற்றங்கள் எவ்வாறு நிகழ்கிறது, அவைகளை தடுப்பது குறித்து விழிப்புணா்வு பயிற்சி அளித்ததோடு இது குறித்து நவீன திரை மூலம் திரையிட்டுக் காட்டி விளக்கிக் கூறினா்.
இணைய மோசடியில் பணத்தை இழந்திருந்தால் பணம் எடுக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் 155260 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை அழைக்கவும் என்றும் தெரிவித்தனா்.
இரும்புலிக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியா் பாலசுந்தரம் முன்னிலை வகித்தாா். ஆனந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மேற்கண்ட பள்ளிகளின் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பயனடைந்தனா்.