முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
உதயநத்தம் காத்தாயி அம்மன்கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 07th February 2022 12:18 AM | Last Updated : 07th February 2022 12:18 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள உதயநத்தம் கிராமத்தில் காத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்து கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 4 ஆம் தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி 4 கால பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகா், முருகன், காத்தாயி அம்மன் ஆகிய கோயில்களில் கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், குவாகம் அடுத்த வல்லம் கிராமத்தில் உள்ள விநாயகா், திரெளபதியம்மன், முருகன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.