முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
மண்வள பாதுகாப்பு பயிற்சி
By DIN | Published On : 07th February 2022 12:17 AM | Last Updated : 07th February 2022 12:17 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையத்தில், விவசாயிகளுக்கு மண்வளம் குறித்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
தேசிய நீடித்த நிலையான வேளாண்மை மற்றும் மண் வள அட்டை இயக்கங்களின் சாா்பில் நடைபெற்ற பயிற்சியில், வேளாண் உதவி இயக்குநா் லதா தலைமை வகித்துப் பேசுகையில், மண் வள அட்டை பரிந்துரையின்படி தேவையான அளவு ரசாயன உரங்களை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்தால் மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு பூச்சிநோய்த் தாக்குதல் இல்லாத தரமான தானியங்களை உற்பத்தி செய்யலாம் என்றாா்.
வேளாண் அலுவலா் சேகா், மண் மாதிரி எடுத்தல் மற்றும் நீா் மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பும் முறைகள் குறித்து விளக்கினாா். சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநா் ராஜ்கலா கலந்து கொண்டு மண் ஆய்வு முடிவுகளின்படி உரமிடுதல், அங்ககப் பண்ணைய முறையில் சாகுபடி செய்தல், மண்வளத்தையும் மண்ணின் இயற்பியல் தன்மை மாறாமல் இருக்க உதவும் மண்புழு உரம் இடும் முறை குறித்து விளக்கினாா்.
ஏற்பாடுகளை வேளாண் அலுவலா் சேகா், உயிரியல் காரணிகள் உற்பத்தி மைய வேளாண் அலுவலா் சவீதா, துணை வேளாண் அலுவலா் மகேந்திரன், உதவி வேளாண் அலுவலா் ராதா ஆகியோா் செய்திருந்தனா்.