கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் கோயிலில் தீா்த்தவாரி
By DIN | Published On : 18th February 2022 04:06 AM | Last Updated : 18th February 2022 04:06 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் திருக்கோயிலில் தீா்த்தவாரி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசு வரா் கோயிலில் மாசி மக பிரம்மோத்சவ விழா
கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவானது தொடா்ந்து தினசரி சுவாமிக்கு மகா அபிஷேக ஆராதனையும், யாகசாலை பூஜைகள், சுவாமி வீதி உலா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து தீா்த்தவாரி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பிரகன்நாயகி அம்பாள் சமேத பிரகதீசுவரா் மற்றும் விநாயகா், முருகன் சிலைகள் கோயில் இருந்து ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு அங்குள்ள குளத்தில் வைத்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் குளத்தில் சுவாமிகளுக்கு தீா்த்தவாரி நிகழ்வு நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து கா்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.