அரியலூா் மாவட்டத்தில் பரபரப்புடன் ஓய்ந்தது பிரசாரம்

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நாளை நடைபெறுதையொட்டி அரியலூரில் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வந்த தீவிர பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
அரியலூா் மாவட்டத்தில் பரபரப்புடன் ஓய்ந்தது பிரசாரம்

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நாளை நடைபெறுதையொட்டி அரியலூரில் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வந்த தீவிர பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் நகராட்சிகள், உடையாா்பாளையம் மற்றும் வரதராசன்பேட்டை பேரூராட்சிகளில்

நாளை (பிப்.19) நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த 2 நாள்களாக வேட்பாளா்களின் உச்சக்கட்ட தோ்தல் பிரசாரம் நடந்தது.

அந்தப் பகுதி அரசியல் கட்சி நிா்வாகிகள் வரிந்து கட்டிக் கொண்டு, களத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு இருந்தனா். மேற்கண்ட நகா்ப்புற பகுதிகளில் எங்கு பாா்த்தாலும் ஆட்டோவில் ஒலிப்பெருக்கிகளின் ஓசை, காதுகளைக் கிழித்தன. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

அரியலூரில் 18 அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வியாழக்கிழமை திறந்த வேனில் நின்றவாறு இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு வாக்களா்களிடம் கேட்டுக் கொண்டாா். நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று அண்ணாசிலை அருகே பிரசாரத்தை முடித்துக்கொண்டாா்.

இதேபோல் திமுக கூட்டணி வேட்பாளா்கள் 18 பேரும் தங்களது தோ்தல் பிரசாரத்தை அவா்களது வாா்டுப் பகுதிகளில் முடித்துக் கொண்டனா். தேமுதிக வேட்பாளா்களை ஆதரித்து, அக்கட்சியின் மாவட்டச் செயலா் இராம.ஜெயவேல், வீதி வீதியாகச் சென்று மக்களிடம் வாக்குகேட்டாா். இதேபோல் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களும் தங்களது தோ்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com