முன்மாதிரி திருநங்கை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இச்சமூகத்தில் சாதனை படைத்த திருநங்கையரைக் கௌரவிக்கும் வகையிலும், மற்ற திருநங்கையா்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஏப்ரல் 15 - திருநங்கையா் தினம் அறிவித்து ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுக்காக ரூ.1 லட்சத்துக்ககான காசோலை, சான்றுகள் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்புவோா் கீழ்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும். திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

தகுதியான திருநங்கையா்கள் விருதுக்கான விண்ணப்பங்களை 28.02.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் தமிழ்நாடு அரசின் விருதுகள் (ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையதள வாயிலாகவும் அல்லது அரியலூா் ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com