அனுமதியின்றி மணல் அள்ளிவந்த மூவா் கைது
By DIN | Published On : 01st January 2022 03:19 AM | Last Updated : 01st January 2022 03:19 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே அனுமதியின்றி டயா் வண்டிகளில் மணல் அள்ளி வந்ததாக, மூவா் கைது செய்யப்பட்டனா்.
உடையாா்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் ஜெயராமன்(56), செல்வகுமாா்(49), சங்கா்(35). இவா்கள் மூவரும் தங்களது மாட்டு வண்டிகளில் காக்காபாளையம் ஓடையில் இருந்து மணல் அள்ளிக் கொண்டு பருக்கல், நடுவலூா் வழியாக உடையாா்பாளையத்தை நோக்கி வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.
சோழங்குறிச்சி அருகே வந்தபோது, உடையாா்பாளையம் காவல் துறையினா் மறித்து சோதனை செய்ததில், அவா்கள் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஜெயராமன், செல்வகுமாா், சங்கரைக் காவல் துறையினா் கைது செய்தனா். மேலும் அவா்களின் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனா்.