ஆசிரியா்களுக்கு செஸ் பயிற்சி முகாம்
By DIN | Published On : 17th July 2022 12:55 AM | Last Updated : 17th July 2022 12:55 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டிகளை நடத்தும் வகையில் தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்வியியல் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியா்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்பை அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன் தொடங்கி வைத்தாா். பயிற்சி வகுப்பில் மாவட்ட கல்வி அலுவலா்கள் அரியலூா் மான்விழி, உடையாா்பாளையம் ஜோதிமணி, செந்துறை பேபி ஆகியோா் ஆசிரியா்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கினா்.
மேலும், இப்பயிற்சி வகுப்பில் செஸ் விளையாட்டு குறித்தும், விதிமுறைகள், நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.