சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆடி அமாவாசை யாகம்

அரியலூா் மாவட்டம், பொய்யாதநல்லூா் கிராமத்தில் உள்ள சாமுண்டீசுவரி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரத்யங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு, ஜாதிக்காய், கடுக்காய், கருமிளகு, ரோஜா இதழ், மா, பலா, வாழை மற்றும் மிளகாய்களை யாகத்தில் போட்டு தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com