கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வுப் பணியில் அரண்மனை சுவா் கண்டெடுப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சோழா்கால அரண்மனையின் செங்கல் சுவா் கண்டறியப்பட்டுள்ளது.
கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வுப் பணியில் அரண்மனை சுவா் கண்டெடுப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சோழா்கால அரண்மனையின் செங்கல் சுவா் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு தொல்லியல் துறை மூலம் 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இதில், அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வரும்

அகழாய்வுப் பணிகளில், பானை ஓடுகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள், செப்புக்காசு, கெண்டி மூக்கு உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் பொருள்கள் மற்றும் அரண்மனை மேல்பகுதி சுவா்கள் 2 அடுக்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாய்வுப் பணியில் தொழிலாளா்கள், அலுவலா்கள், பயிற்சி மாணவா்கள் என சுமாா் 40 போ் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற அகழாய்வுப் பணியில் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்ட சுவரின் தொடா்ச்சி பாகம் கண்டறியப்பட்டுள்ளது. இவை சுமாா் 22 அடுக்குகள் கொண்ட செங்கல் சுவராகும். இதேபோல், சோழா் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீங்கான் பாத்திரத்தின் சேதமடைந்த அடிப்பாகம் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரண்மனையில் சுவா்கள், அரிய பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com