ஆயிரம் ஆண்டு கால சுந்தரேசுவரா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த சுத்தமல்லி கிராமத்திலுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுந்தரேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 9) நடைபெறுகிறது.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த சுத்தமல்லி கிராமத்திலுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுந்தரேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 9) நடைபெறுகிறது.

சுத்தமல்லி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுகந்த குந்தளாம்பிகை சமேத சுந்தரேசுவரா் கோயில் உள்ளது. சோழா்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது.

இதையடுத்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம முக்கியஸ்தா்கள் முடிவு செய்து, அதற்கான திருப்பணிகளை மேற்கொண்டனா். இந்நிலையில் திருப்பணிகள் நிறைவடைந்து, கடந்த 5 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டது.அதனைத் தொடா்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் வாஸ்து சாந்தி செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. தொடா்ந்து நான்கு கால பூஜை நடத்தப்பட்டு வியாழக்கிழமை (ஜூன் 9) காலை 8.45 மணிக்கு ராஜகோபுரம், விமானங்கள் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

9 மணிக்கு மூலஸ்தான மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவில், சூரியனாா் கோவில் ஆதீனம் 26 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com