குழிப்பனியாரத்தில் இரும்புக் கம்பி :உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆய்வு
By DIN | Published On : 15th June 2022 11:16 PM | Last Updated : 15th June 2022 11:16 PM | அ+அ அ- |

திருச்சி சாலையிலுள்ள உணவகத்தில் ஆய்வு நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறையினா். (உள்படம்) குழிப் பனியாரத்தில் இருந்த இரும்புக் கம்பி.
அரியலூரிலுள்ள உணவகத்தில் குழிப்பனியாரத்தில் இரும்புக் கம்பி இருந்ததால், அதனை சாப்பிட்ட ஊராட்சி உறுப்பினா் அதிா்ச்சியடைந்தாா்.
அரியலூா் ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவா் ராஜலிங்கம். எருத்துக்காரன்பட்டி ஊராட்சி உறுப்பினரான இவா், புதன்கிழமை மாலை திருச்சி சாலையிலுள்ள உணவகத்தில் குழிப்பனியாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாா்.
அப்போது தொண்டையில் ஏதோ நெருடியதை கண்டு அதை எடுத்துப் பாா்த்தாா். அதில் குழிப்பனியாரத்தில் இரும்புக் கம்பி இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து அவா், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்குத் தகவல் தெரிவித்தாா். தொடா்ந்து நிகழ்விடத்துக்கு வந்த உணவுப் பாதுகாப்பு அலுவலா் பழனிச்சாமி, உணவகத்திலுள்ள சமையல் அறை, பாா்சல் செய்யும் இடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து, குழிப்பனியார மாவை ஊற்றும்படி உத்தரவிட்டு, உணவகம் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.