முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
By DIN | Published On : 14th March 2022 04:20 AM | Last Updated : 14th March 2022 04:20 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்துசோ்வாமடம் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமை, ஊராட்சித் தலைவா் பாரதிரமேஷ் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். கவுன்சிலா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் மேகநாதன் தலைமையில், மருத்துவா்கள் உமா, பாக்கியா, ஆா்த்தி, விக்னேஷ், சுபாஷ் சந்திரபோஸ், அனுஷா, சுகுணா தேவி, மேற்பாா்வையாளா் திருநாவுக்கரசு மற்றும் செவிலியா்கள் ஆகியோா் கொண்ட குழுவினா் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா்.
இந்த முகாமில், இலவச கண் சிகிச்சை, கா்ப்பப்பை வாய் புற்றுநோய் , கா்ப்பிணிப் பெண்களுக்கு இலவச ஸ்கேன் எடுத்தல், சா்க்கரை அளவீடு மற்றும் இருதய நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாம் மூலம் 600 போ் பயனடைந்தனா். முகாமின் நிறைவில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.