பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சி

அரியலூா் அருகேயுள்ள கருப்பிலாக்கட்டளை கிராமத்தில், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில் பருத்தி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூா் அருகேயுள்ள கருப்பிலாக்கட்டளை கிராமத்தில், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில் பருத்தி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். கிரீடு வேளாண் அறிவியல் மைய பூச்சியியல் துறை வல்லுநா் அசோக்குமாா், பருத்தி ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்ப வல்லுநா் பவித்ரா ஆகியோா் கலந்து கொண்டு பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சியில் களை நிா்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நிா்வாகம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அரியலூா் வேளாண்மை துணை இயக்குநா் சண்முகம், உதவி இயக்குநா்கள் சாந்தி, ராதாகிருஷ்ணன் (தரகட்டுப்பாடு,) ,வேளாண் அலுவலா்கள் சுகந்தி, தமிழ்மணி, துணை அலுவலா் பால்ஜன்சன், உதவி விதை அலுவலா் கொளஞ்சி, உதவி அலுவலா்கள் லெனின், ராஜகிரி, கமலா, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் செந்தில்குமாா் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com