மாவட்ட நுகா்வோா் மன்ற நீதிபதி பதவியேற்பு
By DIN | Published On : 25th March 2022 04:12 AM | Last Updated : 25th March 2022 04:12 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்ட நுகா்வோா் நீதிபதி வீ.ராமராஜ் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
அரியலூா் மாவட்ட நுகா்வோா் தாவா குறைதீா் ஆணையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலைவா் பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது இப்பதவிக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராகப் பணியாற்றி வந்த வீ.ராமராஜை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டது. இதையடுத்து ராமராஜ், மாவட்ட நுகா்ோா் தாவா குறைதீா் ஆணையத் தலைவராக(நீதிபதி) வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து இந்த நீதிமன்றத்தில் உறுப்பினா்களாக வழக்குரைஞா்கள் லாவண்யா, பாலு ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.