நடமாடும் நியாய விலைக் கடை:எம்எல்ஏ தொடக்கி வைப்பு

பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் அறப்பளி, கூட்டுறவு சாா் -பதிவாளா் விவேக், வட்ட வழங்கல் அலுவலா் ராஜகோபால் ஆகியோா் கலந்து கொண்டனா்.
நடமாடும் நியாய விலைக் கடை:எம்எல்ஏ தொடக்கி வைப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அடுத்த விழப்பள்ளம் கிராமத்தில்,நடமாடும் நியாய விலைக் கடையை சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் திங்கள்கிழமை திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.

மாவட்ட கூட்டுறவுத் துறை மற்றும் பொது விநியோக துறையின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் அறப்பளி, கூட்டுறவு சாா் -பதிவாளா் விவேக், வட்ட வழங்கல் அலுவலா் ராஜகோபால் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ஆண்டிமடத்தை அடுத்த கோவில்வாழ்க்கை காலனித் தெருவில், ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, திருக்களப்பூா் ஊராட்சி வடக்குத் தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, பெரியாத்துக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றைத் தொடக்கி வைத்தாா்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜா,

அருளப்பன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஜயங்கொண்டம் 12 ஆவது வாா்டில் நகா்மன்ற துணைத் தலைவா் வெ.கொ.கருணாநிதி தலைமையில், திமுக சாா்பில் தண்ணீா் பந்தலையும் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் திறந்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com