முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
சிறுமி பாலியல் வழக்கில் மேலும் ஒருவா் குண்டா் சட்டத்தில் கைது
By DIN | Published On : 12th May 2022 01:00 AM | Last Updated : 12th May 2022 01:00 AM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் ஒருவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஜயங்கொண்டம் அருகே சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தனியாா் விடுதி உரிமையாளா் உள்பட 12 போ் அண்மையில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இதில் 11 போ் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கீழப்பழுவூரைச் சோ்ந்த பிரதாப் செட்டியாா் மகன் ராஜேந்திரன்(66) என்பவரை குண்டா் சட்டத்தில் அடைக்குமாறு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்ததையடுத்து ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி புதன்கிழமை உத்தரவிட்டாா். அதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூா் மாவட்டக் காவல் துறையினா் வழங்கினா்.