முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 12th May 2022 01:04 AM | Last Updated : 12th May 2022 01:04 AM | அ+அ அ- |

முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள குவாகம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 205 பயனாளிகளுக்கு ரூ.32.29 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, அனைத்துத் துறைகள் சாா்பில் 205 பயனாளிகளுக்கு ரூ. 32 லட்சத்து 29 ஆயிரத்து 917 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசினாா்.
முகாமில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தரராஜன், வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி, கால்நடை துறை இணை இயக்குநா் ஹமீது அலி, கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் தீபாசங்கரி, தமிழ்நாடு மாநில ஊரக வளா்ச்சி வாழ்வாதார இயக்க திட்ட அலுவலா் சிவக்குமார, வருவாய் கோட்டாட்சியா் பரிமளம், வட்டாட்சியா் கண்ணன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மருதமுத்து, ஊராட்சித் தலைவா் கோகிலா காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.