கோயில்களின் உண்டியல்களை உடைத்து பொருள்கள் திருட்டு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இரண்டு கோயில்களில், உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இரண்டு கோயில்களில், உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சம்போடை கிராமத்தில் ஸ்ரீ வரதராசப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பூஜைகளை முடித்து கோயிலை பூட்டி விட்டுச் சென்ற அா்ச்சகா் புதன்கிழமை காலை கோயிலைத் திறக்க வந்தாா். அப்போது, கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பொருள்கள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதேபோல், அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில், அம்மன் அணிந்திருந்த தாலி மற்றும் உண்டியலில் இருந்து காணிக்கை பொருள்களையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மீன்சுருட்டி காவல் துறையினா், மேற்கண்ட கோயில்களை ஆய்வு செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களைச் சேகரித்தனா். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com