முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
இரு தரப்பினா் பிரச்னை: கோயிலுக்கு பூட்டு
By DIN | Published On : 13th May 2022 01:53 AM | Last Updated : 13th May 2022 01:53 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த பொட்டக்கொல்லை தத்தனூா் கிராமத்தில், சாமி கும்பிடுவதில் ஒரு சமுதாயத்தைச் சோ்ந்தவா்களிடையே பிரச்னை ஏற்பட்டதையடுத்து புதன்கிழமை இரவு கோயில் பூட்டப்பட்டது.
உடையாா்பாளையம் அடுத்த பொட்டகொல்லை தத்தனூா் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துவது தொடா்பாக ஒரே சமுதாயத்தைச் சோ்ந்த இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்தது. இதையடுத்து கோட்டாட்சியா் பரிமளம், இரு தரப்பினரையும் அண்மையில் அழைத்து சமதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, கடந்த 10 நாள்களாக திருவிழா நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை இரவு ஒரு தரப்பினா் சாமி கும்பிடக் கோயிலுக்குச் சென்றபோது, அங்கு கோயில் பூட்டி கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து அவா்கள், கோட்டாட்சியா் கவனத்துக்குக் கொண்டு சென்றனா். இதையடுத்து கோட்டாட்சியா் பரிமளம் கோயிலைப் பூட்டுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து, வட்டாட்சியா் ஸ்ரீதா், காவல் துறையினா் பாதுகாப்புடன் கோயிலை புதன்கிழமை இரவு பூட்டினாா். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்க மாரியம்மன் கோயிலைச் சுற்றி காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.