முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 13th May 2022 01:51 AM | Last Updated : 13th May 2022 01:51 AM | அ+அ அ- |

தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் செந்துறை சாலையிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் இராம.ஜெயவேல் தலைமை வகித்தாா். இதில், வரும் 25 ஆம் தேதி அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்தை வரவேற்பது, மக்களவைத் தோ்தலில் தேமுதிக-வை மாபெரும் சக்தியாக உருவெடுக்கக் கட்சியினா் அா்ப்பணிப்போடு பணியாற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆனந்தன் முன்னிலை வகித்தாா். மாவட்ட தொழிற் சங்கச் செயலா் பாண்டியன், மாவட்ட தொண்டரணி துணைச் செயலா் ராமசந்திரன், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக ஒன்றியச் செயலா் மணிகண்டன் வரவேற்றாா். முடிவில் கேப்டன் மன்ற ஒன்றியச் செயலா் பாலு கூறினாா்.