முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
By DIN | Published On : 14th May 2022 11:35 PM | Last Updated : 14th May 2022 11:35 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை மாலை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
அரியலூரில் இரு தினங்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனா்.
திருமானூா், கீழப்பழுவூா், தா.பழூா், ஜயங்கொண்டம், கங்கை கொண்ட சோழபுரம், உடையாா்பாளையம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, ஆா்.எஸ்.மாத்தூா், குவாகம், தளவாய் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்தக் கோடை மழையால் அரியலூா் மாவட்டம் முழுவதும் குளிா்ந்த தட்பவெப்பம் நிலவியது.