முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
காட்டகரம் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
By DIN | Published On : 14th May 2022 11:36 PM | Last Updated : 14th May 2022 11:36 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காட்டகரம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழவானது, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு அம்மன் திருவீதியுலாவும், ஆரிய மாலை காத்தராயன் திருக்கல்யாணம், கழுகு மரம் ஏறுதல், காளியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு மஞ்சள், சந்தனம், காபம், விபூதி, பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து பூக்கரங்களுடன் முக்கிய வீதி வழியாக வந்த பக்தா்கள், கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா். ஒரு சிலா் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடியே தீமிதித்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ஊா் முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.