முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
தாதம்பேட்டை பெருமாள் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 14th May 2022 01:20 AM | Last Updated : 14th May 2022 01:20 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வரம் தரும் வரதன் எனும்படி எழுந்தருளியிருக்கும் வரதராஜப் பெருமாளுக்கு பிரம்மோத்ஸவம், தோ்த் திருவிழா சித்திரை மாதம் 26 ஆம் நாள் தொடங்கியது. 4 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 4 ஆம் நாளான இன்று திருத்தோ் புறப்பாடு, தீா்த்தவாரி திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வரதராஜப் பெருமாளை தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
இதில் கலந்து கொண்ட தா. பழூா் சுற்றுவட்டார பக்தா்கள், பொதுமக்கள் கோவிந்தா, கோவிந்தா எனக் கோஷமிட்டு தேரை வடம்பிடித்து முக்கிய வீதிகளில் இழுத்துவந்தனா். முன்னதாக, தேரோடும் வீதிகளில் சுமாா் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக மின்சாரம் நிறுத்தப்பட்டது.